Followers

Tuesday, 20 September 2016

தேசிய விலங்கு.....

       

                 
  ஒரு தேசத்திற்கான விலங்கு என்று வகுக்கப்படும் போது எந்த விலங்கு அதிகம் இருக்கிறதோ அதையே நாம் தேசிய விலங்கு என நிர்ணயிக்கிறோம். அப்படி பார்த்தால் தேசிய விலங்கு என்று புலியை சொல்லிக் கொல்ல இந்தியாவிற்கு எந்த அருகதையும் இல்லை. ஒரு தேசிய விலங்கைக் கூட பாதுகாக்க தெரியாத ஒரு நாட்டில் மக்களுக்கு எப்படிப் பட்ட பாதுகாப்பு இருக்கும் என எண்ணிப் பார்க்கவே வேண்டாம்.
    
           தேசத்தையே கொன்று திண்ணும் அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டு தேசிய விலங்கை பாதுகாக்க சொல்வது நம் குற்றம்தான். ஊட்டியில் சோலாடா பகுதியில் 4 ஜனவரி 2014 அன்று ஒரு புலி 30 வயது பெண்ணை வேட்டையாடியது.  ஓரிரு நாட்களுக்குள் இன்னும் இருவரை வேட்டையடியது.
        
             இந்நிலையில் வனத்துறையினரும், அதிரடிப்படையினரும் அடங்கிய கூட்டுப் படை அமைக்கப் பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தது. 48 இடங்களில் தானியங்கி கேமராக்களும் வைக்கப்பட்டது. ‘இன்பெரா ரெட்’ எனப்படும் அதிநவீன கேமராவும் வைக்கப்பட்டது. புலி நடமாட்டம் தெரிந்தால் குறுஞ் செய்தி மூலம் அறியும்அளவுக்கு வளார்ந்த தொழிட்நுட்பங்களைக் கொண்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேடுதல் பணியில் இருந்த வனத்துறையினருக்கு புலியின் உறுமல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் புலியை சுற்றி வளைத்து 30ரவுண்டுகள், 18 குண்டுகளில் புலியைக் கொன்றனர்.
           
          இந்நிலையில் புலியை கொன்றது குற்றம், குற்றமில்லை என்று விவாதித்து வருகின்றனர். நாம் பொதுவாக சிந்தித்து பார்த்தால் புலி என்பது ஒரு வேட்டையாடும் விலங்கு. வேட்டைதான் அது உணவுக்கு ஒரே ஆதாரம். மனிதன் முன்னர் வேட்டையாடுதலை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தான். பின்னாளில் அவன் நாகரிக வளர்ச்சியினால் விவசாயம் செய்து தனக்கான உணவை தானே விதைக்க முயன்றான். இது ஒரு பரிணாம வளர்ச்சி. 
              புலி என்பது வேட்டையாடி உணவைத் தேடிக்கொள்ளும் பிரிவைச் சேர்ந்தது. அதன் பசிக்கு மனிதனையும், மிருகத்தையும் வித்தியாசப் படுத்திப் பார்க்க தெரியாது. ஒரு மனிதனே தன்னுடைய சுய லாபத்திற்காகவும் சுய தேவைக்காகவும் ஒரு மனிதனைக் கொல்கிறான். அம்மா, அப்பா, மனைவி, மக்கள் என்று பாராமல் அனைவரையும் கொல்கிறான். ஆறறிவு கொண்ட மனிதனுக்கே வெறிப்பிடித்தால் சொந்த பந்தங்கள் தெரிவதில்லை. தன் பசிக்காக புலி மனிதனைக் கொன்றது என்றால், நாட்டையும் , காட்டையும் அழித்து கட்டடங்களாக.சொகுசு பங்களாககளாக உருவாக்கிக் கொள்ளும் நாம்தான் சுட்டுக் கொல்லப் பட வேண்டிய ஈன பிறவிகள்.
             அந்த புலியைக் கொன்ற அன்றே புலியின் நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்தது. இன்னும் அந்தக் காட்டில் புலி, சிறுத்தை, கரடிகள், காட்டெருமைகள் என வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நாம்தான் இந்த கேடு கேட்ட அரசியல் வாதிகளின் சுய நலத்திற்க்காக எல்லைக் கோடுகள்  போட்டுக் கொண்டு நித்தம் நித்தம் துப்பாக்கியின் சத்தத்தில் வாழ்கிறோம். விலங்குகள் அப்படியல்ல. அவை சுதந்திரமானவை. அவைகளின் வாழ்க்கையை எந்த பணத்தையும், விளம்பரத்தையும் வைத்து நிர்ணயிப்பதில்லை. எல்லைக் கோடுகள் இங்கே யார்போட்டது. அத்துமீறி நுழைந்துவிட்டதாய் சொல்லும் கேவலமான மனித சமூகமே அவைகள் யாரிடம் கைக்கட்டி, வாலாட்டிக் கொண்டு அனுமதி பெற வேண்டும் என்று சொல்லுங்கள். முடிந்தால் அவைகளுக்கும் ஒரு வாக்காளர் உரிமை அட்டை வழங்கிவிடுங்கள். உங்களைப் போல ஓட்டுப் போட்டு எச்சி எழும்புகளுக்கு அலைய அவைகளுக்கும் கற்றுக் கொடுத்துவிடலாம். அப்போது கொடூரப் புலி, கொலை வெறி பிடித்த புலி என்று எழுதிய மானங்கெட்ட ஊடகமும், பத்திரிக்கையும் அவைகள் பின்னால் வாலை சுருட்டிக் கொண்டு ஓடுவார்கள்.