Followers

Tuesday 20 September 2016

ஜென்னியின் காதல் கடிதம்...

          7 ஆண்டுகள் கார்ல் மார்க்ஸுக்காக ஜென்னி காத்திருந்தார். இவர்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்தது. கார்ல் மார்க்ஸின் கடிதத்டிற்காக காத்திருப்பதும், அவருக்கு மறைமுகமாக கடிதம் எழுதுவதிலுமே ஜென்னியின் நாட்கள் நகர்ந்தது....

            அப்படிக் குறிப்பிட்ட நாளில் ஜென்னியிடம் இருந்து கடிதம் வராவிட்டால் மார்க்ஸின் பொருமை பறந்துபோய், கடுஞ்சொற்களை கொண்ட கடிதம் அனுப்பப்படும்... அத்தகைய ஒரு கடிதத்திற்கு ஜென்னியின் மனம் உருகிய காதல் கடிதம் இங்கே...

  என் அன்பிற்குரிய ஒரே ஒருவனே!
                   அன்பே! என்னிடம் நீ இனியும் கோபமாக் இல்லையல்லவா! என்னைக் குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கவில்லை அல்லவா!. சென்ற முறை கடிதம் எழுதியபோது நான் மிகவும் பாதிக்கப்பட்டுப் போயிருந்தேன். அத்தகைய நேரங்களில் ஒவ்வொன்றையும் மிகவும் இருண்டதாகவே காண்கிறேன். மிகவும் பயங்கரமானதாகவே காண்கிறேன். என் உயிருக்குயிரான ஒரே ஒருவனே, உனக்குக் கவலையைத் தருவதற்காக என்னை மன்னித்துவிடு. ஆனால் என்னுடைய காதல் குறித்தும் விசுவாசம் குறித்தும் உனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தால் நான் உள்ளம் உடைந்து போயிருக்கிறேன்.

                  கார்ல்! வழக்கத்தை விட அதிக நாட்கள் நான் கடிதம் எழுதாமல் இருந்துவிட்டேன் என்பதனால் மட்டும் சந்தேகம் தெரிவித்து கடிதம் எழுதலாமா? உன்னால் எவ்வாறு அப்படி எழுத முடிந்தது? எனக்குப் பதில் சொல். உன் கடிதத்தினால் ஏற்பட்ட வருத்தத்தை, எட்கர் குறித்து( ஜென்னியின் தம்பி)ஏற்பட்ட வருத்தத்தை சொல்லப் போனால் என் ஆன்மாவை னிரம்பியிருந்த சொல்லொணா வேதனைகளால் ஏற்பட்ட வருத்தத்தை நானே எனக்குள் வைத்துக் கொண்டு வழக்கத்தை விட அதிக நாட்கள் பதில் எழுதவில்லை என்பதால் இவ்வாறு கடிதம் எழுதலாமா? உனக்கு எவ்விதக் கவலையும் தரக் கூடாது என்பதாலும், பாதிக்கப்படாமல் என்னை நானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாலும்தான் நான் அவ்வாறு செய்தேன். உனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் அவ்வாறு செய்ய நான் கடமைப் பட்டுள்ளேன்.
        ஓ! கார்ல்! என்னைப் பற்றி எவ்வளவு குறைவாக தெரிந்து வைத்திருக்கிறாய்! நினைக்கிறாய்! என் துயரம் எதனால் ஏற்படுகிறது என்பதையும் எங்கே என் இதயம் ரத்தப் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதையும் உணராதவனாய் இருக்கிறாயே! ஒரு இளம் பெண்ணின் காதல் என்பது ஒரு இளைஞனின் காதலிலிருந்து வேறுபட்டது. அது வேறுபட்டதாகத்தான் இருக்க முடியும். வேறெதுவாகவும் இருக்க முடியாது. சொல்லப் போனால் ஒரு இளம் பெண் ஒரு இளைஞனுக்கு தன் காதலையும், தன்னையும் தான் தர முடியுமே தவிர வேறெதையும் தர முடியாது... சாதாரண நிலைமைகளில் கூட ஒரு இளம் பெண் இளைஞனின் காதலில்தான் முழு திருப்தியையும் காண வேண்டும். காதலில் அவள் அனைத்தையும் மறந்து விட வேண்டும்.

                      ஆனால் கார்ல்! என்னுடைய நிலைமையைக் குறித்து எண்ணிப்பார். நீ என்னைக் குறித்து கவலைப்படுவதே இல்லை. நீ என்னை நம்புவதில்லை. உன்னுடைய இன்றைய கவர்ச்சிமிக்க வாலிபக் காதலை நினைவிலே கொள்ளுத் தகுமளவுக்கு சக்தி படைத்தவளல்ல நான். உன்னுடைய அழகான வருடலும், அமைதியான காதலும் அதைக் குறித்து விவரிக்க முடியாத அளவுக்கு அழகாக விவரிப்பும், உன்னுடைய கற்வனையிலிருந்து தோன்றக் கூடிய ஆகர்ஷிக்கத்தக்க படைப்பாக்கமும் வேறெந்தப் பெண்ணையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆனால் இது அனைத்தும் எனக்குக் கவலையையே ஏற்படுத்துகின்றன என்பதுடன் அடிக்கடி சோர்வுக்குக் கொண்டுசென்றும் விடுகிறது. ஏனெனில் உன்னுடைய ஆழ்ந்த காதல் இல்லாது போகுமானால் நீ என்னிடம் வெறுப்புற்றுச் சலனமில்லாது போய்விடுமானால், நான் மகிழ்ச்சிக்கு மென்மேலும் அடிமையாவதெல்லாம் மென்மேலும் அச்சமூட்டுவதாகவே அமையும்.

                  கார்ல்! உன்னுடைய காதல் நீடித்திருக்க வேண்டுமே என்ற கவலையே என்னுடைய மகிழ்ச்சியையும் பறித்து விடுகிறது. உன்னுடைய காதல் நிச்சயமானது என்று எனக்கே உறுதியாகாத வரை உன்னுடைய காதலைக் குறித்து முற்றிலும் மகிழ்ச்சியால்  நான் துள்ளித் திரிய முடியாது. அதைவிட பயங்கரமான விஷயம் வேறெதுவும் எனக்கு ஏற்பட முடியாது. அதனால்தான் நான் அதற்கு முற்றிலும் நன்றியுள்ளவளாக இருக்க முடிவதில்லை.

      அதனால்தான் அந்த அளவு உன்னுடைய காதலினால் வசீகரிக்கப்பட்டிருக்க வேண்டுமே அந்தளவுக்கு உன்னுடைய காதலினால் முற்றிலும் வசீகரிக்கப்படவில்லை. அதனால்தான் காதல் உலகம் என்பதை முற்றிலுமாகப் பற்றிக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாழ்க்கை யதார்த்தம் போன்ற புறவயமான விஷயங்களை நான் உனக்கு அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறேன். கார்ல்! என்னுடைய துயரத்தை நீ புரிந்துக் கொள்ள முடியுமானால் என்னைக் குறித்து நீ இதமாக நடந்துகொள்வாய்!

              உன்னுடைய காதலைக்குறித்து நான் உத்திரவாதமாக இருக்க முடியுமென்றால் என்னுடைய தலை இவ்வளவு பற்றி எரியாது. என்னுடைய இதயத்தில் இரத்தப்பெருக்கு எடுக்காது.உன்னுடைய இதயத்தில் நான் உறுதியாக குடிகொள்ள முடியுமானால் என்னுடைய ஆன்மா வேகமிக்க கவிதை வரிகளைச் சிந்திக்காது என்பதை கடவுள் அறிவார். ஆனால் என் தேவதூதனே! என்னைக் குறித்து நீ கவலைப் படுவதில்லை. என்னை நீ நம்புவதில்லை. உன்னுடைய காதலுக்காக நான் அனைத்தையும் தியாகம் செய்வேன். புத்துணந்ச்சியையும் இளமையையும் நான் பாதுகாக்க முடியாது. அந்தச் சிந்தனையில் மரணம் குடிகொண்டுள்ளது. அதை ஒரு முறையேனும் என் ஆன்மாவில் காண்பாயாகில் நீ என்னைக் குறித்து மிகுந்த அக்கறை செலுத்துவாய். நான் தேடித் தவிக்கும் அந்த ஆறுதல் உன்னுடைய காதலுக்கு வெளியே குடிகொண்டுள்ளது.

                   “அன்பே! உன்னுடைய கடைசிக் கடிதம் கிடைத்ததிலிருந்து என் பொருட்டு நீ ஒரு சச்சரவில் இறங்கி அதன் பின் ஒரு வாட்போருக்கும் போய்விடுகிறாய் என்ற பயத்தினால் நான் என்னையே சித்திரவதை செய்து கொள்கிறேன். இரவும் பகலும் நீ காயப்பட்டு ரத்தப் பெருக்கெடுத்து ஓடி நோய்வாய்ப்பட்டு இருப்பதாகக் காண்கிறேன். முழு உண்மையையும் சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரியான சிந்தனையில் நான்  முற்றிலும் மகிழ்ச்சி அடையாமலில்லை. ஏனென்றால் வாட்போரில் நீ உன்னுடைய வலது கையை இழந்துவிடுவதாக விரிவாகக் கற்பனை செய்து கொண்டேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்தேன்! என் அன்பே! அவ்வாறு நிகழுமானால் நான் உனக்கு மிகவும் தவிர்க்க மிடியாதவளாக ஆகிவிடுவேன். அல்லவா! அதன்பின் உன்னுடைய அனைத்து அருமையான தேவலோகத்திய கருத்துகளை நான் எழுத முடியும் அல்லவா! இவையனைத்தையும் வெகு இயற்கையாகவும் விரிவாகவும் நான் கற்பனை செய்து கொண்டேன். என்னுடைய நினைவுகளில் நான் தொடர்ந்து உன்னுடைய குரலைக் கேட்ட வண்ணம் இருக்கிறேன்.
   

No comments:

Post a Comment