Followers

Wednesday 6 November 2013

காதல் ஒரு முறைதான் வருமா..............?




 




















                   ஆம், காதல் ஒரு முறைதான் வரும். ஒரே ஒரு முறைதான் காதலிக்க முடியும், ஆனால் அந்த காதலுக்கான தேடல்களையும் சேர்த்து நாம் காதல் எனக் கொள்கிறோம். அதனால் தான் காதலில் தோற்றுப் போனதாய் தாடியை மட்டும் வளர்க்கிறோம். கருத்து ஒத்து போவதையெல்லாம் காதல் எனக் கொண்டால் அங்கே காதல் நேசிக்கப் படுவதில்லை கருத்துக்கள் மட்டுமே. காதல் நம்முடைய கருத்துக்களுக்கு ஒத்து போவதால் வருவதல்ல. கருத்து என்பது எப்பொழுதும் நிலைத்த தன்மையை உடையதாய் இருப்பதில்லை. கருத்து என்பது உன் கையில் கொடுக்கப்பட்ட ஒரு புத்தகம். அது படித்து முடிக்கும் வரைதான் அதன் தன்மை உன்னோடு வாசம் செய்யும். அடுத்த புத்தகத்தை நீ தொடங்கும் பொழுது நீ அதன் அடிமையாகிறாய்.
          ஒருவரின் கருத்துக்களுடன் ஒத்து போவதால் காதல் மலர்ந்தது என்று கொண்டால் பின்னாளில் கருத்து மாறுபடுவதால் அந்த காதல் பிரிந்து விடுமா?. அங்கும் காதல் பிரிவதில்லை உங்கள் கருத்துக்கள் மட்டுமே பிரிகிறது. இன்னும் தெளிவாய் சொன்னால் கருத்து என்பது ஒரு உருவமோ, நிறமோ, மணமோ, குணமோ அற்ற நீர் போன்றது. நீ எந்த இடத்தில் எந்த உருவத்தில் கொண்டு சேர்க்கிறாயோ அந்த நிலையை அடையும். ஆனால் காதல் என்பது எதற்கும் வளைந்து கொடுக்காதது. எப்பொழுதும் பிறருக்காய் தன் இயல்பினின்றும் திரியாதது.  காதல் என்பது எப்பொழுதும் கருத்துகளுக்கு அடிமையல்ல.

    காதல் எந்த ஒரு மதத்திற்கோ, பண்பாட்டிற்கோ, தனிப்பட்ட ஒரு சமூகத்திற்கோ கட்டுப்படாதது. ”காதல்” அது சுதந்திரம். புதிதாய் முளைக்கும் ஒரு சிறகு. தன்னம்பிக்கையின் ஆணி வேர். 

          காதலை தேர்ந்தெடுக்க முடியும். நமக்கான காதலை இயற்கை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். எந்த ஒரு காதலும் கடவுளையோ, கண் முன்னே கடந்து போகும் மனிதனையோ சாட்சியாய் கொள்வதில்லை.ஆனால் அந்த வானமும் அதன் நீளமும், கடலும் அதன் ஆழமும், மலையும், மழையும், அந்த பச்சை பசும் பரந்த வெளிகளும் மட்டுமே சாட்சியாய் வைத்து இன்றும் எத்தனை எத்தனை காதல்கள் மலர்கிறது. 

இதைத்தான் தண்ணீர் தேசத்தில் கவிஞர் வைரமுத்து எழுதினார்...
    ”கடற் கரையில் காதலன் மடியில் காதலி ... இந்நிலையில் காதலி காதலனிடம் கேட்கிறாள் இந்த சூரியன் நம்மை சுடுவதில்லையே ஏன் என்று... அதற்கு கதையின் நாயகன் “ காலங்காலமாய் காதலர்களை சுடுவதில்லை என்பது சூரியத் தீர்மானம்” என்று கூறுகிறான்.

         ஆம் இயற்கை காதலர்களை என்றும்  இம்சிப்பதே இல்லை. காதல் என்பது இயற்கை. 

  இயல்பற்ற செயற்கை காரணிகளால் அவசரகதியில் காதலை தேர்ந்தெடுத்தவர்கள் வாழ்க்கையில் அடிப்பட்டுத் தான் ஆக வேண்டும்...

         அகல உழுவதை விட ஆழ உழு என்பது.... மனதிற்கும் பொருந்தும். இந்த விஞ்ஞான உலகில் நட்பு வட்டம் அகலமாகிக் கொண்டே போவதால் மனதின் பக்குவம் அகலப்பட்டுவிட்டது என்ற அறியாமை தான் காதல் முறிவுக்கு முக்கியக் காரணம். கருத்துக்களை மையாகக் கொள்ளும் உறவுப்பாலம் என்றுமே நிலைப்பதல்ல... மனித உணர்வுகள் கருத்துக்களின் அடிப்படையில் அமைந்ததல்ல...இது நிறைய பேருக்கு அடிப்பட்ட பின் தான் புரிகிறது....

        



No comments:

Post a Comment