Followers

Tuesday 20 September 2016

பிராண வாயு......

பிராண வாயுவை கண்டுபிடித்தவர் ஜோசப் பிரிஸ்ட்லி. இவர் கண்டுபிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது வாயுவை பிரித்தரியும் போது அதன் தன்மை, நீரில் கரையும் திறன், நச்சுத் தன்மை போன்றவற்றை ஆராய்ந்தார்...
           

அவர் தன் ஆய்வின் போது தக்கையால் அடைக்கப்பட்ட  வாய்ப்பகுதி உடைய ஒரு பாட்டிலில் உருப்பெருக்கக் குவியாடியின் மூலம் மெர்குரியஸ் கேல்சினேடஸ் (mercurius calcinatus) என்ற பாதர ஆக்ஸைடின் மீது சூரிய ஒளியை விழச் செய்தார்.
பாட்டிலின் வாய்ப்படுதியிலிருந்த குழாயானது நீர்த் தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. குழாயின் மறு பகுதியானது தொட்டியில் கவிழ்த்து வைக்கப்பட்ட பாட்டிலுக்குள் இருந்தது. வேதிவினையின் போது வாயு வேறு எங்கும் செல்லாமல் நீர்த்தொட்டியில் உள்ள பாட்டிலுக்குள் அடைக்கப்படட்து. மெர்க்குரி ஆக்ஸைடு சூடாகும் பொழுது அதிலிருந்து பெறப்படும் வாயு பாட்டிலுக்குள் சென்றது. முதலில் வாயுவை தனிமைப் படுத்த இதே போன்று மூன்று குடுவைகளில் வாயுவை அடைத்தார்.

                            *. முதல் குடுவையின் வாய்ப்பகுதியில் எரியும் மெழுகு வர்த்தியை வைத்தார். அது வேகமாக தீப்பந்துப்போல எரிய ஆரம்பித்தது. ஆய்வின் முடிவில் இவ்வாயு எரியும் தன்மையை அதிகப்படுத்துவதாக கண்டறிந்தார்.
                          **.  இரண்டாம் ஆய்வில் சாதாரண அறையில் இருக்கும் காற்று அடைக்கப்பட்ட ஒரு குடுவையினையும் அருகில் வைத்துக் கொண்டார். இரண்டிலும் ஒவ்வொரு எலியை விட்டு அடைத்தார். சாதாரண அறைக் காற்றில் அடைக்கப்பட்ட எலி 20 நிமிடங்கள் மட்டுமே மூச்சுத் திணறாமல் இருந்தது. ஆனால் மற்றொரு குடுவையில் இருந்த எலி 40 நிமிடங்கள் வரையிலும் மூச்சுத் திணறாமல் இருந்தது. இந்த ஆய்வில் இது தூய வாயு எனக் கண்டறிந்தார்.
                          ***. மூன்றாம் ஆய்வில் தன் கண்களை மூடிக் கொண்டு அடைக்கப்பட்ட வாயுவை வேகமாக உள்ளிழுத்தார். இந்த ஆய்வில் அவருக்கு மூச்சுதிணறலோ வேறு எந்த பாதிப்புமே அவருக்கு ஏற்படவில்லை. இதன் மூலம் வாயுவை ஸ்வாசிப்பதன் மூலம் தனக்கு ஏதோ ஒரு சக்தி பிறப்பதாகவும், வாயு லேசானதாகவும் ஸ்வாசிப்பதன் மூலம் ஒரு வித சுகமான அனுபவம் கிடைப்பதாகவும் இவர் கண்டறிந்தார். ஆனால் வாயுவிற்கு இவர் பெயரிடவில்லை.

No comments:

Post a Comment