Followers

Tuesday, 20 September 2016

தேசிய விலங்கு.....

       

                 
  ஒரு தேசத்திற்கான விலங்கு என்று வகுக்கப்படும் போது எந்த விலங்கு அதிகம் இருக்கிறதோ அதையே நாம் தேசிய விலங்கு என நிர்ணயிக்கிறோம். அப்படி பார்த்தால் தேசிய விலங்கு என்று புலியை சொல்லிக் கொல்ல இந்தியாவிற்கு எந்த அருகதையும் இல்லை. ஒரு தேசிய விலங்கைக் கூட பாதுகாக்க தெரியாத ஒரு நாட்டில் மக்களுக்கு எப்படிப் பட்ட பாதுகாப்பு இருக்கும் என எண்ணிப் பார்க்கவே வேண்டாம்.
    
           தேசத்தையே கொன்று திண்ணும் அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டு தேசிய விலங்கை பாதுகாக்க சொல்வது நம் குற்றம்தான். ஊட்டியில் சோலாடா பகுதியில் 4 ஜனவரி 2014 அன்று ஒரு புலி 30 வயது பெண்ணை வேட்டையாடியது.  ஓரிரு நாட்களுக்குள் இன்னும் இருவரை வேட்டையடியது.
        
             இந்நிலையில் வனத்துறையினரும், அதிரடிப்படையினரும் அடங்கிய கூட்டுப் படை அமைக்கப் பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தது. 48 இடங்களில் தானியங்கி கேமராக்களும் வைக்கப்பட்டது. ‘இன்பெரா ரெட்’ எனப்படும் அதிநவீன கேமராவும் வைக்கப்பட்டது. புலி நடமாட்டம் தெரிந்தால் குறுஞ் செய்தி மூலம் அறியும்அளவுக்கு வளார்ந்த தொழிட்நுட்பங்களைக் கொண்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தேடுதல் பணியில் இருந்த வனத்துறையினருக்கு புலியின் உறுமல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அனைவரும் புலியை சுற்றி வளைத்து 30ரவுண்டுகள், 18 குண்டுகளில் புலியைக் கொன்றனர்.
           
          இந்நிலையில் புலியை கொன்றது குற்றம், குற்றமில்லை என்று விவாதித்து வருகின்றனர். நாம் பொதுவாக சிந்தித்து பார்த்தால் புலி என்பது ஒரு வேட்டையாடும் விலங்கு. வேட்டைதான் அது உணவுக்கு ஒரே ஆதாரம். மனிதன் முன்னர் வேட்டையாடுதலை மட்டுமே தொழிலாக கொண்டிருந்தான். பின்னாளில் அவன் நாகரிக வளர்ச்சியினால் விவசாயம் செய்து தனக்கான உணவை தானே விதைக்க முயன்றான். இது ஒரு பரிணாம வளர்ச்சி. 
              புலி என்பது வேட்டையாடி உணவைத் தேடிக்கொள்ளும் பிரிவைச் சேர்ந்தது. அதன் பசிக்கு மனிதனையும், மிருகத்தையும் வித்தியாசப் படுத்திப் பார்க்க தெரியாது. ஒரு மனிதனே தன்னுடைய சுய லாபத்திற்காகவும் சுய தேவைக்காகவும் ஒரு மனிதனைக் கொல்கிறான். அம்மா, அப்பா, மனைவி, மக்கள் என்று பாராமல் அனைவரையும் கொல்கிறான். ஆறறிவு கொண்ட மனிதனுக்கே வெறிப்பிடித்தால் சொந்த பந்தங்கள் தெரிவதில்லை. தன் பசிக்காக புலி மனிதனைக் கொன்றது என்றால், நாட்டையும் , காட்டையும் அழித்து கட்டடங்களாக.சொகுசு பங்களாககளாக உருவாக்கிக் கொள்ளும் நாம்தான் சுட்டுக் கொல்லப் பட வேண்டிய ஈன பிறவிகள்.
             அந்த புலியைக் கொன்ற அன்றே புலியின் நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்தது. இன்னும் அந்தக் காட்டில் புலி, சிறுத்தை, கரடிகள், காட்டெருமைகள் என வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நாம்தான் இந்த கேடு கேட்ட அரசியல் வாதிகளின் சுய நலத்திற்க்காக எல்லைக் கோடுகள்  போட்டுக் கொண்டு நித்தம் நித்தம் துப்பாக்கியின் சத்தத்தில் வாழ்கிறோம். விலங்குகள் அப்படியல்ல. அவை சுதந்திரமானவை. அவைகளின் வாழ்க்கையை எந்த பணத்தையும், விளம்பரத்தையும் வைத்து நிர்ணயிப்பதில்லை. எல்லைக் கோடுகள் இங்கே யார்போட்டது. அத்துமீறி நுழைந்துவிட்டதாய் சொல்லும் கேவலமான மனித சமூகமே அவைகள் யாரிடம் கைக்கட்டி, வாலாட்டிக் கொண்டு அனுமதி பெற வேண்டும் என்று சொல்லுங்கள். முடிந்தால் அவைகளுக்கும் ஒரு வாக்காளர் உரிமை அட்டை வழங்கிவிடுங்கள். உங்களைப் போல ஓட்டுப் போட்டு எச்சி எழும்புகளுக்கு அலைய அவைகளுக்கும் கற்றுக் கொடுத்துவிடலாம். அப்போது கொடூரப் புலி, கொலை வெறி பிடித்த புலி என்று எழுதிய மானங்கெட்ட ஊடகமும், பத்திரிக்கையும் அவைகள் பின்னால் வாலை சுருட்டிக் கொண்டு ஓடுவார்கள்.
              குற்றம் சாட்டப்பட்ட 269 பேருமே குற்றவாளிகள் என்றும் , இறந்துபோன 54 பேர் தவிர உயிரோடுள்ள 215 பேருக்கும் தண்டனை மற்றும் அபராதம் வழங்கி தீர்ப்பளித்தார் 2011 செப்டம்பர் 29 அன்று தருமபுரி மாவட்ட நீதிபதியாக இருந்த திரு.எஸ். குமரகுரு அவர்கள்.அதில் 4 ஐ.எப்.ஸ் அதிகாரிகள், 84 பேர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், 5 பேர் வருவாய்த்துறை. எதற்கு இந்த தண்டனை என்று யோசிக்கிறீர்களா????


தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம் வாச்சாத்தி. 1992 வரை இந்த கிராமம் இருப்பதையே யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். இப்போது கிராமத்தின் மக்கள் தொகை சுமாராக 800 பேருக்குள் இருக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பே இவர்களின் முக்கிய பிரதானத் தொழில்.விவசாய நிலம், வனப் பொருட்களை சேகரித்தல் இவர்களின் மற்றொரு வாழ்வாதாரம். வறட்டாறு என்று சொல்லக் கூடிய ஓடையும், ஏரியும், பாசனித்திற்கான கிணறுகளும் மொத்தத்தில் இயற்கையோடு இயைந்து வாழும் பக்கியசாலிகள்.

1992 ஜூன் 20 ம் தேதி வாச்சாத்தி மக்களின் மிகக் கொடுமையான நாள். அரசின் அடக்குமுறை சாதனங்களான வனத்துறை, வருவாய்த்துறை, காவல்த்துறையச் சேர்ந்த சுமார்300 பேர், துப்பாக்கி, தடியுடன் வாச்சாட்த்தி கிராமத்தின் மீது படையெடுத்தனர். கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் தப்பிவிட பெண்களும், முதியவர்களும் சிக்கி சின்னா பின்னமாயினர்.

ஊரிலுருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் அடித்து இழுத்துச் சென்று 200 பேருக்கும் மேலானோரை சிறையில் தள்ளினர். கர்ப்பிணிகளும், கைக்குழந்தைகலும் அதில் அடங்குவர். குடி தண்னீர் கிணற்றில் எஞ்சின் ஆயிலையும், ஆட்டு தோலையும் போட்டனர். அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பை துண்டித்தனர். தானிய மூட்டைகளை கொழுத்தினர், பீரோ மற்றும் பணப் பட்டிகளை உடைத்தனர். ஆடு மாடுகளை காணவில்லை. கேட்டால் வனத்துறையினர் பிரியாணி செய்து  சாப்பிட்டு விட்டதாகவும், மீதியை சந்தையில் விற்று விட்டதாகவும் சொல்கிறார்கள்.ஆரூரிலிருந்து வாச்சாத்திக்கு வந்துக் கொண்டிருந்த ஒரே பேருந்தும் நிறுத்தப்பட்டது.

ஆரூர் வனத்துறை அலுவலகத்தில் வைத்து பிடித்து சென்ற ஊர் மக்கள் அனைவரையும் கடுமையாகத் தாக்கி, ஊர்க் கவுண்டர் பெருமாள் என்பவரி அரை நிர்வாணப் படுத்தியதி, பெண்களின் துணிகளை அவிழ்க்குமாறு கட்டாயப் படுத்தி உள்ளனர். பெண்களை விட்டு பெருமாளின் உள்ளாடையை கழற்றச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.பெண்கள் மறுக்கவே ஊர்க் கவுண்டரை விளக்கு மாற்றால் அடிக்கச் சொல்லியுள்ளனர். மறுக்கவே அவர்களே அடித்துக் காட்டியுள்ளனர். 

ஜூன் 21ம் தேதி காலை புழு, பூச்சிகளுடன் கூடிய கஞ்சியை பாசிப்பிடித்த ஈய டம்ளரில் கொடுத்து குடிக்கச் சொல்லி துன்பப்படுத்துயுள்ளனர்.

பயணங்கள் எதை நோக்கி.....            இயற்கை நமக்கான பாதையை வகுத்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் தான் ஒரு போதும் அதில் பயணிப்பதில்லை. நம் பயணங்கள் எப்போதும் வெற்றியை நோக்கித்தான் என்றால் எது வெற்றி என்று சொல்லமுடியுமா?.  முடியும் என்றால் எந்த ஒரு செயலில் நாம் முழுமையாய் மனநிறைவு அடைகிறோமோ அங்குதான் நமக்கான வெற்றியைத் தீர்மானிக்கிறோம். எப்போதும் இந்த மனித மனத்திற்கு மனநிறைவு என்பது இல்லவே இல்லை. எனவே இதுதான்  வெற்றி என்ற நிலையும் நிலையாயில்லை.

                 
                         

              

ஜென்னியின் காதல் கடிதம்...

          7 ஆண்டுகள் கார்ல் மார்க்ஸுக்காக ஜென்னி காத்திருந்தார். இவர்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்தது. கார்ல் மார்க்ஸின் கடிதத்டிற்காக காத்திருப்பதும், அவருக்கு மறைமுகமாக கடிதம் எழுதுவதிலுமே ஜென்னியின் நாட்கள் நகர்ந்தது....

            அப்படிக் குறிப்பிட்ட நாளில் ஜென்னியிடம் இருந்து கடிதம் வராவிட்டால் மார்க்ஸின் பொருமை பறந்துபோய், கடுஞ்சொற்களை கொண்ட கடிதம் அனுப்பப்படும்... அத்தகைய ஒரு கடிதத்திற்கு ஜென்னியின் மனம் உருகிய காதல் கடிதம் இங்கே...

  என் அன்பிற்குரிய ஒரே ஒருவனே!
                   அன்பே! என்னிடம் நீ இனியும் கோபமாக் இல்லையல்லவா! என்னைக் குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கவில்லை அல்லவா!. சென்ற முறை கடிதம் எழுதியபோது நான் மிகவும் பாதிக்கப்பட்டுப் போயிருந்தேன். அத்தகைய நேரங்களில் ஒவ்வொன்றையும் மிகவும் இருண்டதாகவே காண்கிறேன். மிகவும் பயங்கரமானதாகவே காண்கிறேன். என் உயிருக்குயிரான ஒரே ஒருவனே, உனக்குக் கவலையைத் தருவதற்காக என்னை மன்னித்துவிடு. ஆனால் என்னுடைய காதல் குறித்தும் விசுவாசம் குறித்தும் உனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தால் நான் உள்ளம் உடைந்து போயிருக்கிறேன்.

                  கார்ல்! வழக்கத்தை விட அதிக நாட்கள் நான் கடிதம் எழுதாமல் இருந்துவிட்டேன் என்பதனால் மட்டும் சந்தேகம் தெரிவித்து கடிதம் எழுதலாமா? உன்னால் எவ்வாறு அப்படி எழுத முடிந்தது? எனக்குப் பதில் சொல். உன் கடிதத்தினால் ஏற்பட்ட வருத்தத்தை, எட்கர் குறித்து( ஜென்னியின் தம்பி)ஏற்பட்ட வருத்தத்தை சொல்லப் போனால் என் ஆன்மாவை னிரம்பியிருந்த சொல்லொணா வேதனைகளால் ஏற்பட்ட வருத்தத்தை நானே எனக்குள் வைத்துக் கொண்டு வழக்கத்தை விட அதிக நாட்கள் பதில் எழுதவில்லை என்பதால் இவ்வாறு கடிதம் எழுதலாமா? உனக்கு எவ்விதக் கவலையும் தரக் கூடாது என்பதாலும், பாதிக்கப்படாமல் என்னை நானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதாலும்தான் நான் அவ்வாறு செய்தேன். உனக்காகவும், என் குடும்பத்திற்காகவும் அவ்வாறு செய்ய நான் கடமைப் பட்டுள்ளேன்.
        ஓ! கார்ல்! என்னைப் பற்றி எவ்வளவு குறைவாக தெரிந்து வைத்திருக்கிறாய்! நினைக்கிறாய்! என் துயரம் எதனால் ஏற்படுகிறது என்பதையும் எங்கே என் இதயம் ரத்தப் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதையும் உணராதவனாய் இருக்கிறாயே! ஒரு இளம் பெண்ணின் காதல் என்பது ஒரு இளைஞனின் காதலிலிருந்து வேறுபட்டது. அது வேறுபட்டதாகத்தான் இருக்க முடியும். வேறெதுவாகவும் இருக்க முடியாது. சொல்லப் போனால் ஒரு இளம் பெண் ஒரு இளைஞனுக்கு தன் காதலையும், தன்னையும் தான் தர முடியுமே தவிர வேறெதையும் தர முடியாது... சாதாரண நிலைமைகளில் கூட ஒரு இளம் பெண் இளைஞனின் காதலில்தான் முழு திருப்தியையும் காண வேண்டும். காதலில் அவள் அனைத்தையும் மறந்து விட வேண்டும்.

                      ஆனால் கார்ல்! என்னுடைய நிலைமையைக் குறித்து எண்ணிப்பார். நீ என்னைக் குறித்து கவலைப்படுவதே இல்லை. நீ என்னை நம்புவதில்லை. உன்னுடைய இன்றைய கவர்ச்சிமிக்க வாலிபக் காதலை நினைவிலே கொள்ளுத் தகுமளவுக்கு சக்தி படைத்தவளல்ல நான். உன்னுடைய அழகான வருடலும், அமைதியான காதலும் அதைக் குறித்து விவரிக்க முடியாத அளவுக்கு அழகாக விவரிப்பும், உன்னுடைய கற்வனையிலிருந்து தோன்றக் கூடிய ஆகர்ஷிக்கத்தக்க படைப்பாக்கமும் வேறெந்தப் பெண்ணையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆனால் இது அனைத்தும் எனக்குக் கவலையையே ஏற்படுத்துகின்றன என்பதுடன் அடிக்கடி சோர்வுக்குக் கொண்டுசென்றும் விடுகிறது. ஏனெனில் உன்னுடைய ஆழ்ந்த காதல் இல்லாது போகுமானால் நீ என்னிடம் வெறுப்புற்றுச் சலனமில்லாது போய்விடுமானால், நான் மகிழ்ச்சிக்கு மென்மேலும் அடிமையாவதெல்லாம் மென்மேலும் அச்சமூட்டுவதாகவே அமையும்.

                  கார்ல்! உன்னுடைய காதல் நீடித்திருக்க வேண்டுமே என்ற கவலையே என்னுடைய மகிழ்ச்சியையும் பறித்து விடுகிறது. உன்னுடைய காதல் நிச்சயமானது என்று எனக்கே உறுதியாகாத வரை உன்னுடைய காதலைக் குறித்து முற்றிலும் மகிழ்ச்சியால்  நான் துள்ளித் திரிய முடியாது. அதைவிட பயங்கரமான விஷயம் வேறெதுவும் எனக்கு ஏற்பட முடியாது. அதனால்தான் நான் அதற்கு முற்றிலும் நன்றியுள்ளவளாக இருக்க முடிவதில்லை.

      அதனால்தான் அந்த அளவு உன்னுடைய காதலினால் வசீகரிக்கப்பட்டிருக்க வேண்டுமே அந்தளவுக்கு உன்னுடைய காதலினால் முற்றிலும் வசீகரிக்கப்படவில்லை. அதனால்தான் காதல் உலகம் என்பதை முற்றிலுமாகப் பற்றிக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாழ்க்கை யதார்த்தம் போன்ற புறவயமான விஷயங்களை நான் உனக்கு அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறேன். கார்ல்! என்னுடைய துயரத்தை நீ புரிந்துக் கொள்ள முடியுமானால் என்னைக் குறித்து நீ இதமாக நடந்துகொள்வாய்!

              உன்னுடைய காதலைக்குறித்து நான் உத்திரவாதமாக இருக்க முடியுமென்றால் என்னுடைய தலை இவ்வளவு பற்றி எரியாது. என்னுடைய இதயத்தில் இரத்தப்பெருக்கு எடுக்காது.உன்னுடைய இதயத்தில் நான் உறுதியாக குடிகொள்ள முடியுமானால் என்னுடைய ஆன்மா வேகமிக்க கவிதை வரிகளைச் சிந்திக்காது என்பதை கடவுள் அறிவார். ஆனால் என் தேவதூதனே! என்னைக் குறித்து நீ கவலைப் படுவதில்லை. என்னை நீ நம்புவதில்லை. உன்னுடைய காதலுக்காக நான் அனைத்தையும் தியாகம் செய்வேன். புத்துணந்ச்சியையும் இளமையையும் நான் பாதுகாக்க முடியாது. அந்தச் சிந்தனையில் மரணம் குடிகொண்டுள்ளது. அதை ஒரு முறையேனும் என் ஆன்மாவில் காண்பாயாகில் நீ என்னைக் குறித்து மிகுந்த அக்கறை செலுத்துவாய். நான் தேடித் தவிக்கும் அந்த ஆறுதல் உன்னுடைய காதலுக்கு வெளியே குடிகொண்டுள்ளது.

                   “அன்பே! உன்னுடைய கடைசிக் கடிதம் கிடைத்ததிலிருந்து என் பொருட்டு நீ ஒரு சச்சரவில் இறங்கி அதன் பின் ஒரு வாட்போருக்கும் போய்விடுகிறாய் என்ற பயத்தினால் நான் என்னையே சித்திரவதை செய்து கொள்கிறேன். இரவும் பகலும் நீ காயப்பட்டு ரத்தப் பெருக்கெடுத்து ஓடி நோய்வாய்ப்பட்டு இருப்பதாகக் காண்கிறேன். முழு உண்மையையும் சொல்ல வேண்டுமென்றால் இந்த மாதிரியான சிந்தனையில் நான்  முற்றிலும் மகிழ்ச்சி அடையாமலில்லை. ஏனென்றால் வாட்போரில் நீ உன்னுடைய வலது கையை இழந்துவிடுவதாக விரிவாகக் கற்பனை செய்து கொண்டேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்தேன்! என் அன்பே! அவ்வாறு நிகழுமானால் நான் உனக்கு மிகவும் தவிர்க்க மிடியாதவளாக ஆகிவிடுவேன். அல்லவா! அதன்பின் உன்னுடைய அனைத்து அருமையான தேவலோகத்திய கருத்துகளை நான் எழுத முடியும் அல்லவா! இவையனைத்தையும் வெகு இயற்கையாகவும் விரிவாகவும் நான் கற்பனை செய்து கொண்டேன். என்னுடைய நினைவுகளில் நான் தொடர்ந்து உன்னுடைய குரலைக் கேட்ட வண்ணம் இருக்கிறேன்.
   

பிராண வாயு......

பிராண வாயுவை கண்டுபிடித்தவர் ஜோசப் பிரிஸ்ட்லி. இவர் கண்டுபிடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது வாயுவை பிரித்தரியும் போது அதன் தன்மை, நீரில் கரையும் திறன், நச்சுத் தன்மை போன்றவற்றை ஆராய்ந்தார்...
           

அவர் தன் ஆய்வின் போது தக்கையால் அடைக்கப்பட்ட  வாய்ப்பகுதி உடைய ஒரு பாட்டிலில் உருப்பெருக்கக் குவியாடியின் மூலம் மெர்குரியஸ் கேல்சினேடஸ் (mercurius calcinatus) என்ற பாதர ஆக்ஸைடின் மீது சூரிய ஒளியை விழச் செய்தார்.
பாட்டிலின் வாய்ப்படுதியிலிருந்த குழாயானது நீர்த் தொட்டியுடன் இணைக்கப்பட்டிருந்தது. குழாயின் மறு பகுதியானது தொட்டியில் கவிழ்த்து வைக்கப்பட்ட பாட்டிலுக்குள் இருந்தது. வேதிவினையின் போது வாயு வேறு எங்கும் செல்லாமல் நீர்த்தொட்டியில் உள்ள பாட்டிலுக்குள் அடைக்கப்படட்து. மெர்க்குரி ஆக்ஸைடு சூடாகும் பொழுது அதிலிருந்து பெறப்படும் வாயு பாட்டிலுக்குள் சென்றது. முதலில் வாயுவை தனிமைப் படுத்த இதே போன்று மூன்று குடுவைகளில் வாயுவை அடைத்தார்.

                            *. முதல் குடுவையின் வாய்ப்பகுதியில் எரியும் மெழுகு வர்த்தியை வைத்தார். அது வேகமாக தீப்பந்துப்போல எரிய ஆரம்பித்தது. ஆய்வின் முடிவில் இவ்வாயு எரியும் தன்மையை அதிகப்படுத்துவதாக கண்டறிந்தார்.
                          **.  இரண்டாம் ஆய்வில் சாதாரண அறையில் இருக்கும் காற்று அடைக்கப்பட்ட ஒரு குடுவையினையும் அருகில் வைத்துக் கொண்டார். இரண்டிலும் ஒவ்வொரு எலியை விட்டு அடைத்தார். சாதாரண அறைக் காற்றில் அடைக்கப்பட்ட எலி 20 நிமிடங்கள் மட்டுமே மூச்சுத் திணறாமல் இருந்தது. ஆனால் மற்றொரு குடுவையில் இருந்த எலி 40 நிமிடங்கள் வரையிலும் மூச்சுத் திணறாமல் இருந்தது. இந்த ஆய்வில் இது தூய வாயு எனக் கண்டறிந்தார்.
                          ***. மூன்றாம் ஆய்வில் தன் கண்களை மூடிக் கொண்டு அடைக்கப்பட்ட வாயுவை வேகமாக உள்ளிழுத்தார். இந்த ஆய்வில் அவருக்கு மூச்சுதிணறலோ வேறு எந்த பாதிப்புமே அவருக்கு ஏற்படவில்லை. இதன் மூலம் வாயுவை ஸ்வாசிப்பதன் மூலம் தனக்கு ஏதோ ஒரு சக்தி பிறப்பதாகவும், வாயு லேசானதாகவும் ஸ்வாசிப்பதன் மூலம் ஒரு வித சுகமான அனுபவம் கிடைப்பதாகவும் இவர் கண்டறிந்தார். ஆனால் வாயுவிற்கு இவர் பெயரிடவில்லை.

இதய மொழி.....: குழந்தை சளி, காய்ச்சல் , இருமல்

இதய மொழி.....: குழந்தை சளி, காய்ச்சல் , இருமல்: குழந்தை சளி காய்ச்சல்                          பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு காய்ச்சல் சளி இருமல் இவை மாறி மாறி வரும். இத...

குழந்தை சளி, காய்ச்சல் , இருமல்

குழந்தை சளி காய்ச்சல்
                         பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு காய்ச்சல் சளி இருமல் இவை மாறி மாறி வரும். இதனால் அவர்கள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இயற்கையாகவே ஒவ்வொரு நிமிடமும் நம் உடல் நம்மை புதுபித்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவே இந்த உபாதைகள் அடிக்கடி வரும்.
                           அதற்கு இயற்கை மருத்துவம் இருக்கிறது. முடிந்தவரை நாம் ஹலோபதி என்று சொல்லபடும் ஆங்கில மருத்துவத்தை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. சின்ன சின்ன விசயங்களுக்கு கூட பெரிதாய் பயப்படாமல் தெளிவாய் யோசிக்க வேண்டும்.
                           அதற்கு எளிய நாட்டு மருத்துவம் இருக்கிறது. நாம் துளசியை சம அளவு எடுத்து அதை மைய அரைத்து சம அளவு துளசி

கலந்து சுண்டைக்காய் அளவு உருட்டி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.இந்த மாதிரியான நேரங்களில் ஒரு மத்திரையை தாய்ப்பால் கொடுப்பவர்கள் தாய்ப்பாலிலும், அல்லது வெண்ணீரிலோ மூன்று நேரமும் தொடர்ந்து கொடுத்துவர குணமாகும்.