Followers

Wednesday 4 December 2013

இபின் பதூத்தா...


     1304 ஆம் ஆண்டு மொரோக்கோ நகரத்தில் உள்ள ஒரு சிரிய நகரத்தில் ஒரு நீதிபதியின் வீட்டில் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா பிறந்தார். இவர் சிறு வயது முதலே இஸ்லாம் மத்தின் மீது பெரும் நாட்டம் கொண்டிருந்தார். தனது 20 ஆம் வயதில் புனித பயணம் மேற்க்கொண்டார். புனிதக் கடைமைகளை மேற்கொள்வத்ற்காக துவங்கப்பட்ட இந்தப் பயணம் அப்படியே 44 தேசங்கள் 11000 நாட்கள் 75000 மைல் நீண்டு செல்லும் என்று இபின் பதூதாவும் நினைக்கவில்லை...


   தன்னுடைய இருபது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய இபின் பதூதா முப்பது வருடங்களுக்கு பின்னர் தான் மீண்டும் தனது சொந்த நகரை அடைந்தார். சிறிது காலம் மெக்காவில் தங்கியிருந்தார் அப்போது அம்மகளின் வாழ்க்கை முறை பற்றி நுணுக்கமாக அறிந்து கொண்டார். பின்னர் ஒவ்வொரு தேசமாக சென்று உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமிய மன்னர்களை சந்திக்க முடிவு செய்தார்.
    பாக்தாத் நகரத்தை பற்றி விவரிக்கும் போது அவர்களின் வாழ்வியல் நிலைப்பற்றி துல்லியமாக எழுதினார். அவர் குளிக்க செல்லும் முன் மூன்று துண்டுகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். ஒன்று அவர் குளிக்க போகும் முன் கட்டிக் கொள்ள, இன்னொன்று குளித்தவுடன் கட்டிக்கொள்ள மூன்றாவது ஈரத்தை துவட்டவாம். அஃதாவது அவர்கள் சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தனர் என்று அவர் வியந்து எழுதியுள்ளார்.

    தனது நீண்ட புனித பயணத்தின் ஒரு பகுதியாக இபின் பதுதா இந்தியாவிருகும் வந்தார். அப்போது துளக்கின் ஆட்சிக் காலம். உள்நாட்டுக் குழப்பததை தீர்த்து வைப்பதற்காக துக்ளக் தென் பகுதிக்கு சென்றிருந்ததால் இபின் பதூதாவை காண முடியாத்து கண்டு வருத்தம் கொண்டு அவருக்கு 5000 தினார்களை பரிசாய் வழங்க உத்தரவிட்டார்.

      பின்னர் ஒரு சில வாரங்களிலேயே துக்ளக்கிடம் இருந்து இபின் பதூதாவிற்கு அழைப்பு வந்தது. இபின் பதூதா துக்ளக்கின் விசித்திரமான மனப்போக்கு பற்றியும் குதர்க்கமான சிந்தனை பற்றியும் முன்னரே அவர் அறிந்திருந்த காரணத்தால் அவர் துக்ளக்கிற்கு தங்கத்தால் ஆன பரிசுப் பொருளுடன் பார்க்கச் சென்றார்.
          துகளக் அவரை அருகில் அழைத்து பெர்சிய மொழியில் பாராட்டினார். அப்போது அவர் ஒவ்வொரு முறை இபின் பதூதாவை பாரட்டும் போதும் துக்ளக்கின் கையில் இபின் முத்தமிட்டு நன்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. அந்த ஒரு சந்திப்பின் போது மட்டும் அவர் ஏழு முறை துக்ளக்கின் கையில் முத்தமிட்டார்.  இந்த ஒரு சந்திப்பிலேயே அவர் துக்ளக்கின் மனப்போக்கை துல்லியமாக அறிய முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
             சில காலம் இபின் துகளக்கின் நீதிபதியாக பணியாற்றினார். துகளக் ஒரு சிறந்த எழுத்துக் கலை நிபுணர் என்றும், சட்டம் மதம் குறித்த தீவிர சிந்தனை உள்ளவர் என்றும் , பெர்சிய மொழியில் கவிதைகள் எழுதுவார் என்றும் ஆனால் அவ்ர் ஒரு முன்கோபி என்றும் எழுதியிருக்கிறார்.

         ஒவ்வொரு நாளும் சபையில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஏதோதோ காரணங்களுக்காக பிடித்து வரப்படுவார்களாம். விசாரிக்கும் முன்னரே தண்டனைகல் கொடுக்கப்படுமாம். கைகளை வெட்டி கால்களிலும் கால்களை வெட்டி கைகளிலும் கொடுக்கச் சொல்வாறாம்.

     ஒரு முறை ஒரு அறிஞர் துக்ளக்கின் கருத்திற்கு மாற்றுக் கருத்து தெரிவித்தமையால் அவரின் தாடி மயிரை ஒவ்வொன்றாக பிய்த்து கொல்லும் படியாக கொரூர தண்டனை கொடுக்கப் பட்டதாம்.
        சுமார் ஏழு ஆண்டுகள் துக்ளக்கின் அரசில் பணியில் இருந்தார் இபின் பதூதா. இபின் பதூதாவிற்கு மிக ஆச்சர்யமாக இருந்தது வெற்றிலைதான். தென்னாட்டு மக்கள் வெற்றிலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கல் என்ரு அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவரது ஒரு குறிப்பில் விருந்தினர்களை வரவேற்று வெற்றிலை பாக்கு தருவது அவர்களுக்கு தங்கமோ வெள்ளியோ தருவதை விடவும் உயர்வானது என்று குறிப்பிட்டுள்ளார்.
          முகமது பின் துக்ளக்கின் நிர்வாக சீர்கேடு ஒரு பக்கம் தேசத்தை நிலை குலையச் செய்தது. இன்னொரு பக்கம் அவருக்கு எதிராக எதிர்ப்பு இயக்கங்கள் உருவாயின.  துக்ளக் தனது எதிரிகளை ஒழித்துக் கட்ட தனது எதிரிகளோடு தொடர்புடையவர்கள் யார் யார் என கணக்கெடுத்தார். அவர் எதிரி ஒருவரின் வீட்டில் இருந்தது துக்ளக்கிற்கு தெரிய வந்தது. துக்ளக் தன்னை கொன்று விடுவார் என்ற அச்சத்தில் ஒரு வார காலம் பகலும் இரவும் பிரார்த்தனை செய்து உண்ணா நோன்பிருந்தார். பின் பிச்சைக் காரர் வேடமனிந்து டெல்லியில் தெருவெங்கும் அழைந்தார். பின் துக்ளக்கிடம் இருந்து அழைப்பு வரவே பின்னர் அவர் உத்தரவின் பெயரில் சீனாவிற்கு தூதராக அனுப்பப்பட்டார்.  கப்பல் பயணத்தின் போது கப்பல் கவிழ்ந்து விடவே பல இன்னல்கலுக்கிடையே மீண்டும் வேறு தேசம் நோக்கி தன் பயணத்தை திருப்பினார். இவ்வாறு முப்பது ஆண்டுகள் பயணத்தில் கழித்தார்.

      அவரது குறிப்பில் பறவையொன்று மலையைத் தூக்கிச் சென்றதைக் கண்டதாகவும் எழுதியுள்ளார்....


           இபின் பதூதாவின் பயணக் குறிப்புகல் யாவும் அவரது அந்திமக் காலத்தில் மொரோக்கோவின் சுல்தான் ஆணையின் படி இபின் சஜாயி என்ற கவிஞர் எழுதினார். சுமார் இரண்டு வருடங்கல் இதைப் பற்றி எழுதப்பட்டது...


                                                                        குறிப்புகள்   ----THE TRAVELS OF IBN BATTUTA

No comments:

Post a Comment