Followers

Friday 23 January 2015

 கர்ப்பிணி பெண்களுக்கு

ஜலதோஷம்
                        ஒரு சில சமயங்களில் அதிகமான ஜலதோஷம் நம்மை அறியாமல் தொற்றிக் கொள்ளும். அதற்கென எந்த ஆங்கில மருத்துவ மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு இன்னும் ஆரோக்கியம் தரும்.
                       அதிகமான இருமல் மற்றும் சளித் தொல்லை இருப்பின்
                 *. முருங்கை இலை - ஒரு கைப்பிடி
                 *.இஞ்சி                          - சிறு துண்டு
                 *.பூண்டு                         - 3 பல்
                  *.சீரகம்                         - ஒரு தேக்கரண்டி
                  *. மிளகு                       - 4
 ஒரு டம்ளர் தண்ணீரில் முதலில் முருங்கை இலையை போட்டு சாறு இறங்கும் வரை கொதிக்கவிடவும். பின் மீதமுள்ளவற்றை லேசாக தட்டி சேர்த்து கொதிக்கவிடவும். இறக்கி உப்பு சேர்த்து மிதமான சூட்டில் குடிக்கவும். முருங்கை இலைக்கு பதிலாக மணத்தக்காளி இலையை பயன்படுத்தலாம்

No comments:

Post a Comment