Followers

Thursday, 23 January 2014

முதல் ஆணென நீயும்! முதல் பெண்ணென நானும்!




பறவையின் சிறகொன்றை
யாசித்துப் புறப்பட்டேன்
அவனுடன் காதல் போருக்கு....

சாம்பல் தேசத்தின் நடுவே
நீ சுவாசிக்கும் திசை
தேடி நகர்த்தப்பட்டது...

அஞ்சறைப்பெட்டியாய் மாறிப் போன
இதய அறைகளில் பக்குவமாய்
திருடப்பட்டது உன் நினைவுகள்....

சமைத்த நினைவுகளோடு என் தேசம் தேடி
பயணிக்க.....

எங்கிருந்து வந்தாய்
யாதுமற்ற தீவொன்றில்
காதலாய் உயிர்ப்போமென
காற்றின் திசை வழியே கடத்திப் போக....

பிரபஞ்சத்தின் 
முதல் ஆணென நீயும்...

முதல் பெண்ணென நானும்....






2 comments: