Followers

Tuesday, 20 September 2016

குழந்தை சளி, காய்ச்சல் , இருமல்

குழந்தை சளி காய்ச்சல்
                         பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு காய்ச்சல் சளி இருமல் இவை மாறி மாறி வரும். இதனால் அவர்கள் பலவீனமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. இயற்கையாகவே ஒவ்வொரு நிமிடமும் நம் உடல் நம்மை புதுபித்து கொண்டுதான் இருக்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவே இந்த உபாதைகள் அடிக்கடி வரும்.
                           அதற்கு இயற்கை மருத்துவம் இருக்கிறது. முடிந்தவரை நாம் ஹலோபதி என்று சொல்லபடும் ஆங்கில மருத்துவத்தை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. சின்ன சின்ன விசயங்களுக்கு கூட பெரிதாய் பயப்படாமல் தெளிவாய் யோசிக்க வேண்டும்.
                           அதற்கு எளிய நாட்டு மருத்துவம் இருக்கிறது. நாம் துளசியை சம அளவு எடுத்து அதை மைய அரைத்து சம அளவு துளசி

கலந்து சுண்டைக்காய் அளவு உருட்டி வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.இந்த மாதிரியான நேரங்களில் ஒரு மத்திரையை தாய்ப்பால் கொடுப்பவர்கள் தாய்ப்பாலிலும், அல்லது வெண்ணீரிலோ மூன்று நேரமும் தொடர்ந்து கொடுத்துவர குணமாகும்.

Friday, 23 January 2015







உணவு உட்கொள்ளும் போது அதிகமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் தேவையான ஆற்றலை உடல் எடுத்துக் கொள்ள முடியாது.  அதனால் ஜீரணக் கோளாறும் ஏற்படலாம். எந்த உணவை எடுத்துக் கொண்டாலும் நன்றாக மென்று விழுங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. ஜூஸ் சாப்பிடுவதை விட இது ஆரோக்கியமானதும் கூட. சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் பழங்களும் காய்கறிகளும் உடலுக்கு நல்லது. கேரட் முடிந்தவரையில் தினமும் ஒன்று சாப்பிடலாம். பிரிட்ஜில் வைத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கீரைகளை கொஞ்சம் கொஞ்சம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


                                          கர்ப்பகால வாந்தி மயக்கம்

பொதுவாக வாந்தி மயக்கம் கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் அதிகமாக இருக்கும். அதிகமான வாந்தி இருப்பின் பயப்படத் தேவையில்லை. குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறியே. ஆனால் தொடர் வாந்தி இருப்பினும் எதாவது இடையிடையில் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதிகமான உடல் அசதி இருக்கும். அதற்கு

உடல் அசதி
       *. சீரகம்   - 2 தேக்கரண்டி
       *.சர்க்கரை -2 தேக்கரண்டி
சீரகத்தை லேசாக வறுத்து சர்க்கரை சேர்த்து பொடித்து அடிக்கடி நாக்கில் தடவ வயிற்றுப் புண் ஆற்றும். மேலும் உடல் அசதியைப் போக்கும்


கர்ப்பக் கால வாந்தி
           *. மாதுளைப் பழம் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது
           *.உலர் அத்திப் பழம் கடைகளில் கிடைக்கும் அதை தினமும் காலையில் இரண்டு சாப்பிட உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் பலம் தரும் ஒன்று.
           *. உலர் திராட்சையும் இரத்தின் அளவை அதிகரிக்கும். இரண்டு பேரிச்சை சாப்பிடலாம்.
          
பால் முக்கியமான உணவு
               தினமும் காலையிலும் இரவிலும் பால் உட்கொள்வது நல்லது. காலையில் எழுந்தவுடன் பால் சாப்பிடுவதால் வாந்தி வரலாம். அப்படி இருப்பின் காலை உணவுக்குப் பின் 1 மணி நேர இடைவெளியில் பால் சாப்பிடுவது நல்லது.

 கர்ப்பிணி பெண்களுக்கு

ஜலதோஷம்
                        ஒரு சில சமயங்களில் அதிகமான ஜலதோஷம் நம்மை அறியாமல் தொற்றிக் கொள்ளும். அதற்கென எந்த ஆங்கில மருத்துவ மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது கருவில் இருக்கும் குழந்தைக்கு இன்னும் ஆரோக்கியம் தரும்.
                       அதிகமான இருமல் மற்றும் சளித் தொல்லை இருப்பின்
                 *. முருங்கை இலை - ஒரு கைப்பிடி
                 *.இஞ்சி                          - சிறு துண்டு
                 *.பூண்டு                         - 3 பல்
                  *.சீரகம்                         - ஒரு தேக்கரண்டி
                  *. மிளகு                       - 4
 ஒரு டம்ளர் தண்ணீரில் முதலில் முருங்கை இலையை போட்டு சாறு இறங்கும் வரை கொதிக்கவிடவும். பின் மீதமுள்ளவற்றை லேசாக தட்டி சேர்த்து கொதிக்கவிடவும். இறக்கி உப்பு சேர்த்து மிதமான சூட்டில் குடிக்கவும். முருங்கை இலைக்கு பதிலாக மணத்தக்காளி இலையை பயன்படுத்தலாம்

Monday, 2 June 2014

பால்யத்தின் வாசனை....



பாலும், பருப்பு சாதமும்,
அம்மா மடியும் இருக்கும் வரை
பால்யம் முடிவு பெறாத ஒன்றாகவே
என்னில் நகர்ந்தது.

நகரத்து நெரிசலில் எல்லாம்
தொலைந்துவிடாமல்
இருக்க பத்திரமாய் பிடித்துக்
கொண்டேன் என் பால்யத்தை

Thursday, 23 January 2014

முதல் ஆணென நீயும்! முதல் பெண்ணென நானும்!




பறவையின் சிறகொன்றை
யாசித்துப் புறப்பட்டேன்
அவனுடன் காதல் போருக்கு....

Wednesday, 4 December 2013

இபின் பதூத்தா...


     1304 ஆம் ஆண்டு மொரோக்கோ நகரத்தில் உள்ள ஒரு சிரிய நகரத்தில் ஒரு நீதிபதியின் வீட்டில் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா பிறந்தார். இவர் சிறு வயது முதலே இஸ்லாம் மத்தின் மீது பெரும் நாட்டம் கொண்டிருந்தார். தனது 20 ஆம் வயதில் புனித பயணம் மேற்க்கொண்டார். புனிதக் கடைமைகளை மேற்கொள்வத்ற்காக துவங்கப்பட்ட இந்தப் பயணம் அப்படியே 44 தேசங்கள் 11000 நாட்கள் 75000 மைல் நீண்டு செல்லும் என்று இபின் பதூதாவும் நினைக்கவில்லை...