Followers

Showing posts with label கர்ப்பக் கால வாந்தி. Show all posts
Showing posts with label கர்ப்பக் கால வாந்தி. Show all posts

Friday, 23 January 2015

                                          கர்ப்பகால வாந்தி மயக்கம்

பொதுவாக வாந்தி மயக்கம் கர்ப்பத்தின் ஆரம்ப காலங்களில் அதிகமாக இருக்கும். அதிகமான வாந்தி இருப்பின் பயப்படத் தேவையில்லை. குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பதன் அறிகுறியே. ஆனால் தொடர் வாந்தி இருப்பினும் எதாவது இடையிடையில் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதிகமான உடல் அசதி இருக்கும். அதற்கு

உடல் அசதி
       *. சீரகம்   - 2 தேக்கரண்டி
       *.சர்க்கரை -2 தேக்கரண்டி
சீரகத்தை லேசாக வறுத்து சர்க்கரை சேர்த்து பொடித்து அடிக்கடி நாக்கில் தடவ வயிற்றுப் புண் ஆற்றும். மேலும் உடல் அசதியைப் போக்கும்


கர்ப்பக் கால வாந்தி
           *. மாதுளைப் பழம் அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது
           *.உலர் அத்திப் பழம் கடைகளில் கிடைக்கும் அதை தினமும் காலையில் இரண்டு சாப்பிட உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மேலும் பலம் தரும் ஒன்று.
           *. உலர் திராட்சையும் இரத்தின் அளவை அதிகரிக்கும். இரண்டு பேரிச்சை சாப்பிடலாம்.
          
பால் முக்கியமான உணவு
               தினமும் காலையிலும் இரவிலும் பால் உட்கொள்வது நல்லது. காலையில் எழுந்தவுடன் பால் சாப்பிடுவதால் வாந்தி வரலாம். அப்படி இருப்பின் காலை உணவுக்குப் பின் 1 மணி நேர இடைவெளியில் பால் சாப்பிடுவது நல்லது.